தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சதுரகிரி மலையில் ஆய்வு

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலைப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

Update: 2020-12-19 02:40 GMT
சதுரகிரி மலையில் ஆய்வு செய்ய வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.
சுந்தரமகாலிங்கம் கோவில்
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று வந்தனர். கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் வழுக்கல் பாறை, மாங்கனி ஓடை, சின்ன படிவெட்டு பாறை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஒடை, கருப்பசாமி கோவில் ஓடை ஆகியவை உள்ளன.

பாலம்
இந்த மலைப்பாதைகளில் நீர்வரத்து வரக்கூடிய பாதைகள் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், மழை காலங்களில் பக்தர்கள் நீரோடை பகுதிகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவும், மழைக்காலங்களில் பக்தர்கள் கோவிலுக்கு ஆற்றை கடந்து சென்று திரும்பும் வகையிலும் பாலங்கள் அமைப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு
மலைப்பாதையில் கோண தலைவாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வரக்கூடிய பல்வேறு இடங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு இன்ஸ்பெக்டர் மாரிக்கனி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் சதுரகிரி கோவிலில் தங்கியிருந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்