சமையல் எரிவாயுக்கான மானியத்தை அதிகரித்து வழங்க வேண்டும்; அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
சமையல் எரிவாயுக்கான மானியத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார்.
சிறப்பு பூஜை
ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றி பெற வேண்டியும், அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்று ரஜினி ஆட்சி அமைக்க வேண்டியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பூஜைக்கு பிறகு அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை உயர்வு
ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
உஜ்வாலா திட்டத்தில் தமிழக அரசு அதிக பயன் பெற்றுள்ளது. சமையல் எரிவாயுக்கான மானியத்தை அதிகரித்து வழங்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டுக்காக மானியம் கொடுக்கிறது.
மோடி ஏழைகளின் கண்ணீரை துடைப்பதற்காக கொடுக்கிறார். பலரது அனுமானத்தின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் வருகிறது.
வரவேற்கிறோம்
ரஜினியின் ஆன்மிக அரசியலை ஏற்று கமல் வருவதாக இருந்தால் வரவேற்கிறோம்.
ஆன்மிக அரசியல் தான் தலைமை ஏற்க வேண்டும். அனைத்து தரப்பையும் ஆதரிப்பது தான் ஆன்மிக அரசியல். அனைத்துக்கட்சி தொண்டர்களும,் ரஜினியின் ஆன்மிக கட்சிக்கு வந்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.