வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருக்கனூரில் தி.மு.க. வினர் உண்ணாவிரதம் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருக்கனூரில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
திருக்கனூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங் களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருக்கனூர் கடைவீதியில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார் (வடக்கு), சிவா எம்.எல்.ஏ. (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். வடக்கு மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் ஏ.கே.குமார் வரவேற்றார். மண்ணாடிப்பட்டு தொகுதி செயலாளர் கலைவாணன் முன்னிலை வகித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. துரை.ரவிக் குமார், தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன், காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், தி.மு.க. வடக்கு மாநில பொருளாளர் செந்தில்குமார், தெற்கு மாநில துணை அமைப்பாளர் கென்னடி, தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் காந்தி, முகமது யூனுஸ், துணை அமைப்பாளர் ஏழுமலை, மண்ணாடிப்பட்டு தொகுதி தொண்டரணி அமைப்பாளர் செந்தில்வேலன், வடக்கு மாநில மாணவரணி செயலாளர் விஜயராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.