கியாஸ் விலை உயர்வை கண்டித்து தமிழர் கழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழர் கழகம் கட்சி சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ஈரோடு,
கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழர் கழகம் கட்சி சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் பரமசிவன், மாவட்ட தலைவர் பிரபுதேவா, நிறுவன தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.