கனமழையால் பயிர்கள் பாதிப்பு: கணக்கெடுப்பு பணியை முடித்து நாளை அறிக்கை சமர்பிப்பு வேளாண்மை கூடுதல் இயக்குனர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியை விரைந்து முடித்து நாளை அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என வேளாண்மை கூடுதல் இயக்குநர் வளர்மதி கூறனார்.

Update: 2020-12-18 03:12 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் முழ்கின.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில் வேளாண்மை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும், கணக்கெடுப்பு பணிகளையும் வேளாண்மை கூடுதல் இயக்குனர் வளர்மதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அறிக்கை

நிவர் மற்றும் புெரவி புயலினால் சம்பா, தாளடி நெற்பயிர் ஏறத்தாழ 90, 623 எக்டேர் நீரில் மூழ்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியினை விரைந்து முடித்து நாளை (சனிக்கிழமை) அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) உத்திராபதி, துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ரவிந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்