துவரங்குறிச்சி அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி

துவரங்குறிச்சி அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.;

Update:2020-12-18 07:27 IST
துவரங்குறிச்சி, 

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கருமலை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 24). இவர், சிரஞ்சீவி(29), வினோத் (27) ஆகியோருடன் டிராக்டரில் பொருத்தும் ஏர்கலப்பை வாங்குவதற்காக பிரான் மலைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செவந்தம்பட்டி என்ற இடத்தில் வந்த போது கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சண்முகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

வினோத் மற்றும் சிரஞ்சீவி சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் சண்முகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்