அரவக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு உள்ள வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு உள்ள வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலமுருகன், வட்ட பொருளாளர் சேக் அப்துல் காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும், ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள கிராம உதவியாளர்களுக்கு ஓட்டுனர் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.