ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் எதிரே வட்டார தலைவர் ராஜகோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொன்னமராவதி வட்டார கிளையின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் எதிரே வட்டார தலைவர் ராஜகோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் புவியரசு வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவகுமார், வட்டார செயலாளர் மணிக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நிறைவுரையாற்றினார். இடைநிலை ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவில், ஆண்டு ஊதிய உயர்வு மறுக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்டார கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.