பெரும்பாக்கம், சரவம்பாக்கத்தில் அம்மா மினி கிளினிக் தொடக்கம்

தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி ஆணைப்படி தமிழகம் முழுவதும் மக்கள் பயனடையும் விதமாக 2 ஆயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.;

Update: 2020-12-18 00:23 GMT
அம்மா மினி கிளினிக்
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 மினி கிளினிக் தொடக்க அரசால் அனுமதிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக இந்த மாத இறுதிக்குள் 13 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த நிலையில் மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் மற்றும் சரவம்பாக்கம் போன்ற இடங்களில் நேற்று அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், செங்கல்பட்டு சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரியா ராஜ், மருத்துவ அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம், காஞ்சீபுரம் முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், மாவட்ட நிர்வாகிகள் யஸ்வந்த் ராஜ். ஆனூர் பக்தவச்சலம். மதுராந்தகம் தாசில்தார் துரைராஜன், மதுராந்தகம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்