பொன்னமராவதி அருகே தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றும் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு

பொன்னமராவதி வட்டார பகுதிகளில் தேசிய வேளாண் வளர்ச்சி இயக்கத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2020-12-18 00:21 GMT
பொன்னமராவதி, 

பொன்னமராவதி வட்டார பகுதிகளில் தேசிய வேளாண் வளர்ச்சி இயக்கத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், துணை இயக்குனர் மோகன்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வாழைக்குறிச்சி கிராமத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின்கீழ், ராமையா மகன் திருப்பதி, தாதகவுண்டர் மகன் பழனியாண்டி மற்றும் கருப்பையா ஆகியோர் நிலத்தில் விளைவிக்கப்பட்டு இருந்த 3 எக்டேர் குதிரை வாலியை பார்வையிட்டனர். கடந்த ஆண்டு வாழைக்குறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழுவினரால் விளைநிலமாக மாற்றப்பட்டு உளுந்து பயிரிடப்பட்டுள்ள 50 எக்டேர் நிலப்பரப்பையும் பார்வையிட்டனர். அப்போது பொன்னமராவதி வேளாண் உதவி இயக்குனர் சிவராணி உள்ளிட்ட வேளாண் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்