தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரசார் ஏர் கலப்பை பேரணி

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் காங்கிரசார் ஏர்கலப்பை பேரணி நடத்தினர்.

Update: 2020-12-17 23:15 GMT
தூத்துக்குடி,

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஏர்கலப்பை பேரணி நடந்தது.

பேரணிக்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெயக்குமார், அருள், சிவசுப்பிரமணியன், வக்கீல் சுப்பிரமணிய ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி புறப்பட்ட சிறிது நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 44 பெண்கள் உள்பட 115 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்