புதுச்சேரியில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,622 ஆக அதிகரித்துள்ளது.;

Update: 2020-12-17 18:25 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,622 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 622 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இன்று 32 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 36,693 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 307 பேர் சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்