மாவட்டத்தில் கொரோனாவுக்கு இளம்பெண் பலி - 16 பேருக்கு தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இளம்பெண் பலியானார். மேலும் 16 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.;

Update: 2020-12-17 10:41 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனிடையே கிருஷ்ணகிரியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு ரத்தம், சளி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண் கடந்த 13-ந் தேதி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த இளம்பெண் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இவர்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 422 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 150 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்