வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி லளிகத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நல்லம்பள்ளி,
நல்லம்பள்ளி அருகே உள்ள லளிகம் கிராமத்தில் ஒன்றிய பா.ம.க சார்பில், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் கவுன்சிலர் செந்தில் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் மாது, முன்னாள் ஒன்றிய தலைவர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் அன்புகார்த்தி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் நிர்வாகிகள் செல்லதுரை, கோவிந்தசாமி, தங்கம், மகேந்திரன், மாது, மாணிக்கம், கலைச்செல்வம், கார்த்திகேயன், ராஜா, செந்தில்குமார், கோபி, அன்பரசு, முத்து, ரஞ்சித்குமார், அய்யாசாமி, தர்மலிங்கம், காளியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பா.ம.க.வினர் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கினர்.