ராமநாதபுர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கையை வலியுறுத்த கோடாங்கியாக மாறிய ஊராட்சி தலைவரின் கணவர்; வீடியோ வைரலாகிறது

திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சியில் கோகிலா ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். ஊராட்சியில் குவிந்து கிடக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் பதவிக்கு வந்த கோகிலா ராஜேந்திரன் ஏமாற்றம்தான் மிஞ்சியது என்று அவரது கணவர் ராஜேந்திரனிடம் கூறிஉள்ளார்.

Update: 2020-12-17 03:18 GMT
கோடாங்கியாக மாறிய ஊராட்சி தலைவரின் கணவர்
இதையடுத்து ஊராட்சியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய கோடாங்கி வேடமிட்டு உடுக்கை அடித்து கோரிக்கைகளை வலியுறுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் உதவியாளராக உத்தரவை ஊராட்சி தலைவர் தீபாராதனையுடன் அமர்ந்திருந்தார். மேலும் பெருங்களூர், லாந்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் குறி கேட்பதுபோல் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். அப்போது ராஜேந்திரன் கோடாங்கி அடித்தபடி, ஊராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 10 மாதங்களாக எஸ்.எப்.சி. சிறப்பு நிதி வழங்காமல் உள்ளதால் ஊராட்சி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியில்லாமல் ஊராட்சி மன்ற தலைவர்கள் திண்டாடி வருகின்றனர். சிலர் சொந்த செலவில் பல தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நிதி நெருக்கடி அதிகமாகி வருவதால் கடன் வாங்கி தேவைகளை நிறைவேற்றும் சூழ்நிலை உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊராட்சிக்கு சேர வேண்டிய நிதி 
ஒதுக்கீட்டை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும் செய்திகள்