மார்கழி மாத பிறப்பு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2020-12-17 02:31 GMT
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.
சிறப்பு அனுமதி
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

மார்கழி மாத பிறப்பையொட்டி இந்த கோவிலுக்கு நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. ஆதலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து இருந்தனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 6 மணிக்கு திறந்துவிடப்பட்டது.

பக்தர்களுக்கு அனுமதி
இதையடுத்து பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாதப்பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாமி தரிசனம்
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இந்த சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்