பழனி அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு பலி

பழனி அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்துபோனார்.;

Update: 2020-12-17 01:00 GMT
நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கணேசன் (வயது 42). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பழனியில் இருந்து சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். பழனியை அடுத்த தாழையூத்து பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது, எதிரே உடுமலைபேட்டையில் இருந்து தூத்துக்குடி நோக்கி லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணேசன் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன கணேசனுக்கு தேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்