தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி சி.ஐ.டி.யு.வினர் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வின் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

Update: 2020-12-17 00:12 GMT
புதுக்கோட்டை, 

மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி ஊதிய உயர்வு அரசாணை வெளியிட வேண்டும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஒரு மாத சம்பளம் போனசாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வின் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கலெக்டர் அலுவலகம் அருகே சிறைச்சாலை பக்கம் வந்தடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் சி.ஐ.டி.யு.வினர், மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது மழை பெய்தபோதும் குடை பிடித்தப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்