வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2020-12-16 04:50 GMT
வாய்மேடு,

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வாய்மேட்டை அடுத்த தகட்டூர் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் ரவேதி பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்கத்தை சேர்ந்த வீரப்பன். அனைந்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் செங்குட்டுவன், ஜெயா, இந்திரா, உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனா்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கீழ்வேளூா்

கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் மகாலிங்கம், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளா் நாகராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளாளர் மகேந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் சிவசாமி, முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருமருகல்

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய செயலாளர்(ெபாறுப்பு)ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் தமிமுல்அன்சாரி கலந்து ெகாண்டு ேபசினாா். இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய விவசாய சங்க நிர்வாகி கோவிந்தராஜ், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்