புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
திருச்சி,
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் பிச்சை பிள்ளை முன்னிலை வகித்தனர். புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் பொது வினியோக திட்டம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்ட சம்பள கமிட்டி அறிக்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சூரி, நாராயணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.