பெரம்பலூர் அருகே பரிதாபம்: ‘கிரயான்’ பென்சிலை தின்ற சிறுமி சாவு

பெரம்பலூர் அருகே ‘கிரயான்’ பென்சிலை தின்ற சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2020-12-16 00:24 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரியங்கா (வயது 8). இவள் ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

சம்பவத்தன்று பிரியங்கா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ‘கிரயான்’ பென்சிலை தின்றதில் மயங்கி கிடந்தாள். இதனை கண்ட அவளது பெற்றோர், பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியங்கா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘கிரயான்’ பென்சிலை தின்ற சிறுமி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்