இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இந்திய குடியரசு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-15 22:55 GMT
வி.கைகாட்டி,

தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இந்திய குடியரசு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்