மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி ஆர்ப்பாட்டம்
மழை ெவள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய கான்கிாீட் வீடுகள் கட்டித்தரக்ேகாரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி தாசில்தார்அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வையாபுரி. ஒன்றிய தலைவர் பாஸ்கர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரராமன்,. ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கான்கீாிட் வீடுகள்
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பதிலாக ரூ. 5 லட்சத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். கூரை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றி தர வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ேகாஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு ் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலு, நகர செயலாளர் முருகேசன், ஊராட்சி தலைவர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.. முன்னதாக முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், மன்னார்குடி சாலை, ெரயில்வே நிலையம் வழியாக வந்து முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒன்றிய ஆணையர் சிவக்குமாரிடம், கனமழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கான்கிாீட் வீடுகள் கட்டித்தரவேண்டும் எனக்கோரி சுமார் 1200 மனுக்கள் கொடுத்தனர். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி,
முன்னாள் ஒன்றிய துணை தலைவர் தட்சிணாமூர்த்தி,
நகர செயலாளர் மார்க்ஸ், விவசாய சங்க நிர்வாகி குணசேகரன், குமார் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.