வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
தமிழகம் முழுவதும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழக அரசை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து அந்ததந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி கள்ளக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று நகர பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கராத்தேமணி தலைமை தாங்கினார்.
வக்கீல் சமூக நீதிப்பேரவை மாவட்ட செயலாளர் பழனிவேல், மாநில இளம் பெண்கள் துணை செயலாளர் வனஜா, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அமைப்பு செயலாளர் நாராயணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் கே.பி.பாண்டியன் கலந்துகொண்டு வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி ஒதுக்கீடு கேட்டு கண்டன உரையாற்றினர்.
அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதேபோல் ஏமப்பேர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல், வன்னியர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஏழுமலை, மாநில மாணவரணி சங்க துணை அமைப்பு செயலாளர் அழகர், வன்னியர் சங்க இளைஞர் படை நிர்வாகி செந்தில், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆறுமுகம், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் சாதிக்பாஷா மற்றும் நிர்வாகிகள் சந்திரசேகர், கராத்தேசீனு, வெங்கட், குமார், அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகேஎலவனாசூர்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் நேரு, ஒன்றிய செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் முனியன், ராஜா, சேட்டு பலராமன் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பாலி கிராமத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்வாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. புகைப்பட்டி கிராமத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் எலவனாசூர்கோட்டை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ப.செழியன் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர். அப்போது நகர செயலாளர் கேபிள் சரவணன், சட்ட பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் வக்கீல்கள் வீரா செல்வராஜ், சுவி,ஜி, சரவணகுமார், மாநில விவசாய சங்க நிர்வாகி சீனு கவுண்டர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் குமரகுரு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுடரொளி சுந்தர், முன்னாள் நகர செயலாளர்கள் குப்பன், சத்தியமூர்த்தி, நகர தலைவர் முருகன் செட்டியார், இளைஞரணி நிர்வாகி கவுதம் உள்பட பலர் உடன் இருந்தனர். செட்டிதாங்கல் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பா.சக்திவேல் தலைமையில் பா.ம.க.வினர் கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டில் மாவட்ட துணைச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் ராஜா மற்றும் முத்து ஆகியோர் தலைமையில், ஒன்றிய மகளிரணி தலைவி ரேகா, ஒன்றிய தலைவர் பழனிவேல், ஒன்றிய துணைத் தலைவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். ரிஷிவந்தியத்தில் மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜா தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு அளித்தனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன், ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் சரவணன், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் மணி, வெங்கடேசன், செந்தில் பிரபா, அழகு ராஜா, செல்வம், ரவி, ஆனந்தகுமார், முனிவாழை சேகர் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு தலைமையில் மாவட்ட துணை செயலாளர் எம்.கே.லோகநாதன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் த.லோகநாதன், நகர செயலாளர் ஜெகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவியரசு, வன்னியர் சங்க நகர செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.
இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் பூட்டை, அரசம்பட்டு கொசப்பாடி, புதுப்பாலப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் பா.ம.க.வினர் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 234 இடங்களில் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.