9 மாதங்களுக்கு பிறகு திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி

9 மாதங்களுக்கு பிறகு திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-12-15 00:45 GMT
ஜீயபுரம், 

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அதில், முக்கொம்பு சுற்றுலா மையமும் ஒன்றாகும்.

தற்போது கொரோனா தொற்று வெகுமாக குறைந்துள்ளதால் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கோவில்கள், வர்த்தக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரிய சுற்றுலா மையங்கள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளதால் முக்கொம்பு சுற்றுலா மையம் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.

முககவசம் கட்டாயம்

முக்கொம்பு சுற்றுலா மையம் திறக்கப்பட்டதையொட்டி, பணியாளர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தினர். மேலும், பூங்காக்களை சீரமைத்து கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர். சுற்றுலா மையம் திறக்கப்பட்ட தகவல் அறிந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று வருகை தந்தனர். அப்போது அங்குள்ள ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகளை நுழைவு வாயிலில் வைத்து அவர்களின் உடல் வெப்பநிலையை சரி பார்த்ததோடு, கிருமி நாசினி கொடுத்து கைகளை நன்றாக கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகள் கண்டிப்பாக முக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சுற்றுலா மையத்திற்குள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவித்தனர்

மேலும் செய்திகள்