முல்லுண்டில் தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அலுவலகம் திறப்பு

முல்லுண்டில் தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அலுவலகத்தின் திறப்பு விழா நடந்தது.;

Update: 2020-12-14 07:00 GMT
மும்பை,

மராட்டிய மாநில தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. முல்லுண்டு ஆசாத்நகரில் பாரத ரத்னா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு மன்ற மும்பை தலைவர் என்.ரசல் நாடார் தலைமை வகித்தார். செயலாளர் கே.ராஜ்குமார் நாடார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை சேர்மன் ராமராஜா நாடார் மன்ற அலுவலகத்தையும், டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்தையும் திறந்து வைத்தார். காமராஜா் உருவ படத்தை தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை செயலாளர் காசிலிங்கம் நாடார், குமார் நாடாரும், சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டப படத்தை பட்டிமன்ற நடுவர் அவனிமாடசாமியும் திறந்து வைத்தனர்.

மன்ற துணை தலைவர் வடிவேல் நாடார், நிர்வாககுழு உறுப்பினர் பொன்னுநாடார், ராஜா இளங்கோ நாடார், அழகேசன் நாடார், ஜெபக்குமார் ஜேக்கப், லிங்கதுரை நாடார் உள்ளிட்டவர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். விழாவில் உல்வே நோட் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி எல்சிக்கு மன்றத்தின் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. ரெம்ஜிஸ், ஜான்கென்னடி, என்.பாலன், கணேஷ் நாடார், மாயாண்டி நாடார், குணசீலன் நாடார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தாராவி காமராஜர் பவுண்டேசன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மன்ற மும்பை பொருளாளர் ஜெபக்குமார், இணைச்செயலாளர் மாரியப்பன் நாடார், நிர்வாககுழு உறுப்பினர்கள் ரவி, பெனியல், சைமன் நாடார், சிவனுபாண்டி, விஜயபாஸ்கர், மணிகண்டன் மற்றும் முல்லுண்டு கிளை தலைவர் சாமுவேல், செயலாளர் செல்வன், துணை தலைவர் யோகராஜா, இணை செயலாளர் ஜான், ராஜா கவுண்டர், காட்கோபர் கிளை தலைவர் தமிழழகன், நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்