ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு
ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.;
ஆரணி,
ஆரணி சைதாப்பேட்டை கந்தசாமி தெருவில் உள்ள நகராட்சி பள்ளி, கமண்டல நாகநதி தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, எஸ்.வி. நகரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, குண்ணத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஆரணி தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சிவகுமார், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், பி.ஆர்.ஜி.சேகர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் பாரி பி.பாபு, நகர செயலாளர் அசோக்குமார், வட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.