ஆற்காட்டில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 14 இடங்களில் பட்டாசு வெடித்து ரஜினி மக்கள் மன்றம் அன்னதானம்

ஆற்காடு நகரம் மற்றும் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-12-13 14:34 GMT
ஆற்காடு, 

ஆற்காடு பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்ற நகர செயலாளர் ஏ.எம்.வரதன் தலைமை தாங்கினார். ஒன்றிய இணைச் செயலாளர் பாஸ்கரன், நகர துணைச் செயலாளர்கள் ரஜினி செல்வம், முருகேசன், நகர மகளிர் அணி செயலாளர் கற்பகம், ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், இணைச் செயலாளர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வி.எம்.சேட்டு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி, மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.நீதி என்கிற அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர். மேலும் ஆற்காடு முதல் கலவை வரை ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச பஸ் பயண ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் ஆற்காடு பஸ் நிலையத்திலிருந்து தாஜ்புரா, முப்பது வெட்டி, அருங்குன்றம் ஆகிய இடங்களுக்குச் செல்ல இலவச ஆட்டோவுக்கும் ஏற.பாடு செய்தனர். இதனையொட்டி ஆற்காடு நகரில் 14 இடங்களில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் ஆற்காடு நகர நிர்வாகிகள் குமரவேல், பிரபு, ராஜா, இளைஞரணி நிர்வாகிகள் ஜெய்சங்கர், கோபி, நவீன் பாபு, சதீஷ்குமார், நகர மகளிரணி கலையரசி, கீதா, தேவி, ஆற்காடு ஒன்றிய நிர்வாகிகள் முருகன், சீனிவாசன், கோவிந்தராஜ், பூங்காவனம், கேசவன் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் மதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்