கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. இதில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள்.

Update: 2020-12-13 03:52 GMT
கடலூர், 

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று காலை கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள ராஜகோபால சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கே.டி.பி. ரஜினி பிரபாகர், ஏ.ஜி. ரஜினி மூர்த்தி, நகர துணை செயலாளர் சீனுவாசன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ரஜினி சீனுவாசன், செயற்குழு உறுப்பினர்கள் ரஜினி அப்பு, முஸ்தபா, புதுப்பாளையம் ரஜினி சங்கர், மருத்துவர் கலைவேந்தன், சுகுமார், ஒன்றிய செயலாளர் அய்யனாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தாயுமான் வரவேற்றார். வெங்கடேஷ்பாபு, ராஜ்குமார், ஆன்ந்த், மருத்துவர் கலைவேந்தன், சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புருஷோத்தமன் நகரில் கேக் வெட்டி பட்டாசு வெடித்தும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அறிவழகன், பாபா சரவணன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செம்மண்டலம் கலை உலக முதல்வர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரஜினிபாபு, அன்பரசு, சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

மஞ்சக்குப்பத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் மன்றம் சார்பில் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ரவி தலைமை தாங்கி வேட்டி, சேலை மற்றும் அன்னதானத்தை வழங்கினார். மாலையில் கடலூர் துறைமுகம் தில்லை நகரில் 300 பேருக்கு வேட்டி, சேலை அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர செயற்குழு உறுப்பினர் ரஜினி அப்பு செய்திருந்தார்.

நெல்லிக்குப்பம், நெய்வேலி

நெல்லிக்குப்பத்தில் நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர் கே.டி.பி. ரஜினி பிரபாகர், நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி, துணை செயலாளர் கார்த்திக், ஜீவா, இணை செயலாளர் பாபு என்கிற முருகன், நகர செயற்குழு உறுப்பினர்கள் அருள்பிரகாஷ், ரஜினி பாபு, இளைஞரணி செயலாளர் சபரி மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி நகர மக்கள் மன்றம் சார்பில் 19-வது வட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் பள்ளியில் அன்னதானமும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் ரஜினி செல்வம், இணை செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம், பண்ருட்டி

விருத்தாசலம் நகர மக்கள் மன்றம் சார்பில் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் சுரேஷ், இணை செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் ரஜினிபாஸ்கர், இளைஞரணி செயலாளர் பூவராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி நகர மக்கள் மன்றம் சார்பில் 500 பேருக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் மோகன், இணை செயலாளர் ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்டு உப்பலவாடி, திருப்பணாம்பாக்கம், காட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றிய செயலாளர் அய்யனாரப்பன், இணை செயலாளர் பத்மநாபன், துணை செயலாளர் கிருஷ்ணராஜ், முரளி, புலவேந்திரன், சரவணன், ரஜினிபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்ணாகிராமம்

அண்ணாகிராமம் ஒன்றியம் கண்டரக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் சாத்திப்பட்டு, சித்திரைசாவடி, கலசப்பாக்கம், புதுப்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் சக்கரவர்த்தி, துணை செயலாளர் ரஜினிகுமார், புதுப்பேட்டை பேரூராட்சி செயலாளர் குணா, இணை செயலாளர் ரஜினிசெல்வா, துணை செயலாளர் வடிவேல், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி ஒன்றியத்தில் 1000 பேருக்கு முககவசம் வழங்கப்பட்டது. மேலும் வீசூர், காடாம்புலியூர், வேகாக்கொல்லை, முத்தாண்டிக்குப்பம் ஆகிய இடங்களில் அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் சீனுவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம், நல்லூர் ஒன்றியம்

விருத்தாசலம் ஒன்றியம் தொட்டிக்குப்பம், மணவாளநல்லூர், கருவேப்பிலங்குறிச்சி, வேட்டக்குடி ஆகிய கிராமங்களில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், துணை செயலாளர்கள் வேலு, ரஜினிபாபு, ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நல்லூர் ஒன்றிய மக்கள் மன்றம் சார்பில் வள்ளலார் கருணை இல்ல மாணவர்களுக்கு மதிய உணவு, பேனா, நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் தாழநல்லூர், வேப்பூர், பெண்ணாடம், சவுந்தரசோழபுரம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக பெண்ணாடம் பெரியகோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மங்களூர்

மங்களூர் ஒன்றியம் திட்டக்குடி, ஆவினங்குடி, ஆவட்டி ஆகிய பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. மங்களூர் ஒன்றிய செயலாளர் ஆர்.கே. வேல்மணி, இணை செயலாளர் பெரியசாமி, துணை செயலாளர் ரஜினிராஜா, செயற்குழு உறுப்பினர்கள் வரதராஜன் மற்றும் சந்தோஷ்குமார், ரஜினிபாலு, திட்டக்குடி பேரூராட்சி செயலாளர் விஜயகுமார், ராமச்சந்திரன், சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவி, மாவட்ட துணை செயலாளர்கள் கே.டி.பி. ரஜினிபிரபாகர், ஏ.ஜி. ரஜினிமூர்த்தி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் நடராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரஜினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்