விருதுநகர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்ற நவீன எந்திரம்; கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்

விருதுநகர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற நவீன எந்திர செயல்பாட்டினை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2020-12-12 23:50 GMT
பாதாள சாக்கடை
விருதுநகர் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாடு இன்னும் முழுமை பெறாத நிலையில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பினை அகற்றிட நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களை பயன்படுத்தி வந்தது.

தற்போது இதற்கான நவீன தானியங்கி எந்திரத்தை மத்திய அரசின் இயற்கை எரிவாயு உற்பத்தி குழுமத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. ரூ. 45 லட்சம் மதிப்பீட்டிலான இந்த எந்திரம் பாதாள சாக்கடைகளில் 33 அடி வரை ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் திறன் கொண்டது.

செயல்பாடு
இந்த எந்திரத்தின் செயல்பாட்டினை நேற்று கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்து எந்திர செயல்பாட்டினை பார்வையிட்டார். இந்த எந்திரம் நகர் பகுதியில் குறுகிய தெருக்களிலும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்பினை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி எந்திரத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்த பின்னரே இந்த எந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த எந்திரம் மின்சாரம், ஜெனரேட்டர் மூலம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்