தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-12-12 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் மழைநீர் வெளியேற வடிகால் இல்லாததால் தண்ணீர் தொடர்ந்து வடியாமல் உள்ளது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு, சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

இந்த நிலையில் மாநகரில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மோட்டார்கள் மூலம் மழைநீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.

மேலும் பழைய மாநகராட்சிக்கு எதிரே உள்ள பஜார் வழியாக கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனால் அந்த கடைகளை அகற்றுவதற்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நேற்று 30 கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து வடிகால் தூர்வாரப்பட உள்ளது. இதனால் மழைநீர் விரைவாக வெளியேற்றப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்