நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 31 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை யூனியன், வள்ளியூர், களக்காடு, மானூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 655 ஆக அதிகரித்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 159 ஆக உயர்ந்தது.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 932 ஆக உயர்ந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 838 ஆக உயர்ந்தது. இதில் 15 ஆயிரத்து 565 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் 133 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 140 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.