புதுச்சேரியில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,406ஆக உயர்ந்துள்ளது.;

Update: 2020-12-11 07:24 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37,406 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை ஒட்டுமொத்தமாக 4.3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 3.88 லட்சம் பேருக்கு தொற்று இல்லை. இதுவரை 37 ஆயிரத்து 406 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 367 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 36,420 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்