பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி குழு செயல்வீரர்கள் கூட்டம் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
பெருந்துறை தொகுதியில் நடந்த அ.தி.மு.க. வாக்குச்சாவடி குழு செயல்வீரர்கள் கூட்டத்தில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
சென்னிமலை,
பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) செயல்வீரர்கள்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பெருந்துறை சக்தி திருமண மண்டபத்தில் நடந்தது.
பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
நலத்திட்டம்
அவர் பேசும்போது, “அம்மா (ஜெயலலிதா) வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஏழைகளுக்கு பொங்கல் பரிசு உள்பட தினம் ஒரு நலத்திட்டம் என்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதுபோல் பெருந்துறை தொகுதி மக்களுக்காக கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த திட்டங்கள் குறித்து வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் செயல்வீரர்- செயல் வீராங்கனைகளாக பணியாற்ற வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, டாக்டர் பொன்னுச்சாமி, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் மணிமேகலை, அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் சந்திரசேகரன், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமாகேஸ்வரன், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல், கண்ணம்மாள் ராமசாமி, கவுன்சிலர்கள் ஹேமலதா சம்பத், பார்வதி ராஜ், பழனிச்சாமி, அப்புசாமி, மோகனசுந்தரி மாணிக்கம், மோகன், நடராஜ், பேரூர் அ.தி.மு.க. செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பனிச்சாமி, சீதப்பன், பெரியசாமி, அய்யாசாமி, சின்னசாமி, துரைசாமி உள்பட பெருந்துறை, ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.