ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 2-வது கொரோனா அலை மிகவும் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் தினந்தோறும் 150 முதல் 200 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் 5 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு தினந்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. மேலும் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கு எந்த அளவு அதன் பாதிப்பு உள்ளது என்பது குறித்தும் கண்டறியப்பட்டது.
ரூ.19¾ லட்சம் அபராதம்
மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுஇடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து சுகாதாரத்துறை பணிகள் இணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் அரசின் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.19 லட்சத்து 72 ஆயிரத்து 700 அபராதமும் வசூல் செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.