திருவையாறில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 75 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது
திருவையாறில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதில் 75 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருவையாறு,
திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முகாமில் முடநீக்கியல் டாக்டர் வாசுதேவன், மனநல டாக்டர் சித்ரா, காது, மூக்கு, தொண்டை டாக்டர் கோவிந்தசாமி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை மருத்துவ பரிசோதனை செய்து, உதவித்தொகை பெறுவதற்கான மாற்றுத்திறனாளிகள் கண்டறிந்தனர். முகாமில் 150 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 75 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அடையாள அட்டை
முகாமில் சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆணையர் மோகனா, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன் ஆகியோர் அடையாள அட்டை வழங்கினர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜராஜன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.