நாகையில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
நாகையில் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல், மாவட்ட சிறை, கருவூலம், மாவட்ட பதிவாளர் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு ஊழியர்கள் சங்கம் உள்பட முக்கிய அலுவலகங்கள் உள்ளது. இங்கு செல்லும் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாகவே காணப்படுகிறது. இந்த சாலையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். அப்போது நிலைதடுமாறி சேறும், சகதியில் விழுந்து விடுகின்றனர். வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ளும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேறும், சகதியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி
திட்டச்சேரியில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை திட்டச்சேரியில் இருந்து திருமருகல் வரை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டச்சேரி-திருமருகல் இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.