ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி இன்று முதல் நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவி தகவல்

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ரஜினி மக்கள் மன்ற கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-11 03:18 GMT
கடலூர்,

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா நாளை(சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) புதுப்பாளையம் தரைக்காத்த காளியம்மன் கோவிலில் பாபா சரவணன், அறிவழகன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜையும், அதை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நகர மன்றம் சார்பில் நகர செயலாளர் தாயுமான் ஏற்பாட்டில் 4 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

வேட்டி-சேலை

இதையடுத்து நாளை காலையில் மாவட்ட தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலில் சிறப்பு பூஜையும், மஞ்சக்குப்பம் விக்னேஷ் மகாலில் அன்னதானம், 500 பேருக்கு இலவச வேட்டி- சேலையும், செம்மண்டலத்தில் ஏழைகளுக்கு அன்னதானம், மாலையில் கடலூர் துறைமுகத்தில் வேட்டி-சேலையும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாபு, அன்பரசு ஆகியோர் செய்து வருகின்றனர்.

இதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், நல்லூர், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய நகர, ஒன்றியங்களிலும் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவி, மாவட்ட துணை செயலாளர்கள் பிரபாகர், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்