விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-12-11 01:22 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி கண்டன உரையாற்றினார்.

கோஷம்

இதில் சி.ஐ.டி.யு. தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி, ஐ.என்.டி.யூ.சி. முருகானந்தம், மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பயன்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்