ஊரக மேம்பாட்டு திட்டத்துக்கு சரத்பவார் பெயர் - மந்திரி சபை ஒப்புதல்
ஊரக மேம்பாட்டு திட்டத்துக்கு சரத்பவாரின் பெயரை வைக்க மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் சரத்பவார். அவருக்கு நாளை(12-ந் தேதி) பிறந்தநாள் ஆகும். இந்தநிலையில் அவருக்கு பிறந்தநாள் பரிசாக மாநில ஊரக மேம்பாட்டு திட்டத்துக்கு சரத்பவாரின் பெயரை மாநில அரசு வைத்து உள்ளது.
நேற்று முன்தினம் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஊரக மேம்பாட்டு திட்டத்துக்கு ‘சரத்பவார் ஊரக மேம்பாட்டு திட்டம்’ என பெயர் வைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரித்தல், கிராம பஞ்சாயத்துகளின் மேம்பாடு, விவசாய குளங்கள் அமைத்தல், கால்நடைகள் கூடாரங்கள் கட்டுதல், கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் பேன்றவை இந்த திட்டத்தின் நோக்கம் என மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.