வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட தொழிலதிபர் வேலழகன் மகனை கொல்ல முயற்சி பிரபல ரவுடியின் கூட்டாளிகள் கைது
வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட தொழிலதிபர் வேலழகன் மகனை கொலை செய்ய முயன்றதாக பிரபல ரவுடியின் கூட்டாளிகளான 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை,
திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் வேலழகன். என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர். தொழிலதிபரான இவருக்கு கீதா என்கிற மனைவியும், சச்சிதானந்தம் (வயது 21) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழில்போட்டி காரணமாக வேலழகன் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தற்போது சச்சிதானந்தம் ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் திருபுவனை கடைவீதியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து சச்சிதானந்தத்தை சுற்றி வளைத்து தாக்க முயன்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. ஆனால் அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் சிக்கினார். 3பேர் தப்பி ஓடி விட்டனர்.
2 பேர் கைது
பிடிபட்டவர் திருபுவனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் ஆகியோர் விசாரித்தனர். இதில், அவர் திருவண்டார்கோவில் சுதானா நகரை சேர்ந்த ராகுல் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது தகவலின்பேரில் கலிதீர்த்தாள்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிரி (23) என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் வேலழகனின் மகனை கொல்ல முயன்றவர்கள் பிரபல ரவுடி ஜனாவின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. எனவே அவரது தூண்டுதலின் பேரில் கொலை செய்ய முயற்சி செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருபுவனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.