நாச்சியார்கோவில் அருகே பரிதாபம்: வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி சாவு

நாச்சியார்கோவில் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-12-10 23:03 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே உள்ள மாத்தூர் பெரிய தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மணிகண்டன்(வயது 35). விவசாய தொழிலாளியான இவர் நேற்று வழக்கம்போல் மேலவாய்க்கால் வழியாக வயலுக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது வயல் வரப்பு பகுதியில் மின் கம்பி அறுந்து கிடந்தது.

இதை பார்க்காமல் மணிகண்டன் மின்கம்பி மீது கால் வைத்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விசாரணை

இதுகுறித்த தகவலின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்