நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 24 பேருக்கு கொரோனா

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-12-10 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 13 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 638 ஆக உயர்ந்தது.

தற்போது கொரோனாவுக்கு 165 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 210 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 152 ஆக உயர்ந்தது. இவர்களில் 7 ஆயிரத்து 917 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 155 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 829 ஆக உயர்ந்தது. இதில் 15 ஆயிரத்து 556 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 140 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்