பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சுழற்கோப்பை கலெக்டர் வழங்கினார்
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்று விளையாடியது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா திருப்பத்தூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்று விளையாடியது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா திருப்பத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேஷன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் பி.பீ.சுனில்குமார், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. சொக்கலிங்கம் தலைமை தாங்கினர். பொதுச்செயலாளர் கே.எஸ்.சதானந்த் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பி.தாமோதரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற திருவள்ளுவர் மாவட்ட அணிக்கு பரிசு மற்றும் ராஜாராணி சுழற் கோப்பையும், கிருஷ்ணகிரி மாவட்ட அணிக்கு இரண்டாவது பரிசு மற்றும் சிறந்த வீரர், பவுலர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் பள்ளி கிரிக்கெட் சங்க தலைவர் சிவசங்கர், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், விக்னேஷ், ஜெயச்சந்திரன், யாசர்அராபத் உள்பட பலர் பேசினார்கள். இந்த போட்டியில் விளையாடிய மாணவர்களை 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கன்னியாகுமரியில் ஜனவரி 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார்கள்.