சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
கிராம மக்கள் சாலையை சீரமைக்க கோரி அரவக்குறிச்சி-பாளையம் ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறை அருகே சேர்வைகாரன்பட்டியில் இருந்து தோளிபட்டி செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் சேர்வைகாரன்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் குண்டும் குழியுமான அந்த சாலையில் மண் கொட்டப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக மழை பெய்த காரணத்தால், அந்த சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் சாலையை சீரமைக்க கோரி அரவக்குறிச்சி-பாளையம் ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் விரைவில் தார்சாலை அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். ஆனால் சாலையை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் இருந்த சேறும், சகதி அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.