தேனி அரசு போக்குவரத்து கழக பணிமனையின் நுழைவு வாயிலில் படுத்து டிரைவர் போராட்டம்
பணி ஓய்வு வழங்கக்கோரி, தேனி அரசு போக்குவரத்து கழக பணிமனையின் நுழைவு வாயில் முன்பு படுத்து டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேனி,
தேனி அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் வசிப்பவர் வடிவேல் (வயது 58). அரசு பஸ் டிரைவர். நேற்று இவர், தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தார். அங்கு பணிமனையின் முன்பு நுழைவு வாயிலில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனக்கு பணி ஓய்வு, ஓய்வூதியம், பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அட்டைகளை அவர் வைத்து இருந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட வடிவேல் கூறுகையில், “நான் கடந்த 28 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்துள்ளேன். கடந்த ஜூலை மாதம் நான் பணி ஓய்வு பெற வேண்டும்.
பணி நீட்டிப்பு வேண்டாம்
இதற்கிடையே தமிழக அரசு ஓய்வு பெறும் வயதை 59 ஆக நீட்டித்தது. ஆனால், எனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம் என்றும், பணி ஓய்வு வழங்கக்கோரியும் அதிகாரிகளுக்கு முறைப்படி கடிதம் எழுதி கொடுத்தேன். ஆனால், எனக்கு இதுவரை பணி ஓய்வு வழங்கப்படவில்லை.
ஓய்வூதியம், பணப்பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. 2 மாதங்களாக வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளேன். பணிமனை அதிகாரிகள் என்னை பணிக்கு வருமாறு அழைக்கின்றனர். ஆனால், நான் உடல் நலக்குறைவால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். வயது முதுமையால் கண் பார்வையும் பாதிக்கப்பட்டு உள்ளது. என்னால் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று சொல்லிவிட்டேன். ஆனாலும், எனக்கு பணி ஓய்வு வழங்கப்படவில்லை. எனவே பணி ஓய்வு வழங்க வேண்டும்” என்றார்.
அதிகாரிகள் உறுதி
இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து, வடிவேலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவருடைய கோரிக்கைக்கு தீர்வு காண துரித நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.