விழுப்புரத்தில் பலத்த மழை தாழ்வான பகுதிகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது
விழுப்புரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது.
விழுப்புரம்,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்க கடலில் உருவான இருவேறு புயலின் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்து காணப்பட்டது. இதனால் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் மெல்ல வடிய தொடங்கியது.
இந்நிலையில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 9.30 மணியில் இருந்து சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை ½ மணி நேரத்திற்கும் மேலாக தூறிக்கொண்டே இருந்த நிலையில் காலை 10.15 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் 40 நிமிடமாக கொட்டி தீர்த்தது.
தண்ணீர் தேங்கியது
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதுபோல் தாழ்வான பகுதிகளான வீனஸ் நகர், கணேஷ்நகர், கே.கே.நகர், மணிநகர், பாண்டியன் நகர், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் மீண்டும் தேங்கியது. விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள பழைய சிந்தாமணி தெருவில் கோலியனூரான் வாய்க்கால் நிரம்பி சாக்கடை நீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி தேங்கியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரெயில்வே சுரங்கப்பாதையில்...
மேலும் இந்த மழையினால் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம் சேறும், சகதியுமாக மாறியதால் அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வரும் சில்லரை காய்கறி கடைகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கொத்தமங்கலம் ரெயில்வே சுரங்கப்பாதையில் ஏற்கனவே தேங்கியிருந்த தண்ணீர் இன்னும் வடியாத நிலையில் நேற்று காணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் அந்த சுரங்கப்பாதையில் மேலும் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.