அரியலூர் மாவட்டம் த.மு.மு.க. சார்பில் கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Update: 2020-12-09 22:42 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு த.மு.மு.க. அரியலூர் மாவட்ட தலைவர் கமாலுதீன் தலைமை தாங்கினார். கருத்தரங்கை அஹமது மதனி கிராத் ஓதி தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் சமூக நீதி படைப்பாளர் சங்க தாஹிர் பாட்சா, தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்