திருப்பத்தூரில் மத்திய அரசு சட்டதிருத்தத்தை கண்டித்து டாக்டர்கள் வேலைநிறுத்தம் - ஆஸ்பத்திரிகளும் மூடப்பட்டிருந்தன

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க திருப்பத்தூர் கிளை டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-12-09 14:00 GMT
திருப்பத்தூர், 

ஆயுஷ் மருத்துவம் படித்தவர்கள் அலோபதி மற்றும் ஆபரேஷன் செய்யும் ஒரே கலவை என்ற சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாகவும், இதனை கண்டித்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க திருப்பத்தூர் கிளை டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் திருப்பத்தூர் கிளை தலைவர் டாக்டர் பி.பிரபாகரன் தலைமை தாங்கினார். டாக்டர் கே.டி.சிவகுமார், முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைவர் டாக்டர் திலீபன் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரும் சட்டதிருத்தம் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. டாக்டர்கள் லீலாசுப்ரமணியம், தங்கமணி, சுமதி, டி.பி.மணி. ஜெயராமன் உள்ளிட்ட பலர் பேசினார்கள். டாக்டர்கள் செந்தில் குமரன். செல்லப்பன், வேல்முருகன், இளம்பரிதி உள்ளிட்ட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் இந்த சட்டத்தை கண்டித்து தனியார் மற்றும் அனைத்து ஆஸ்பத்திரிகள் காலை முதல் மாலை வரை மூடப்பட்டு இருந்தது. அரசு மருத்துவமனையில் கொரோனா மற்றும் அவசர சிகிச்சை தவிர்த்து அனைத்து சிகிச்சைகளையும் தவிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

மேலும் செய்திகள்