அந்தியூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு சாக்கடைக்கு குழி தோண்டும்போது கிடைத்தது
அந்தியூர் அருகே சாக்கடைக்கு குழி தோண்டும்போது முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் மொசக்கவுண்டனூர் கிராமத்தில் இருந்து குருவரெட்டியூருக்கு ஊராட்சி சார்பில் சாக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சாக்கடை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.
அதேபோல் நேற்று காலை 10 மணி அளவில் எந்திரம் மூலம் பணியாளர்கள் மொசுக்கவுண்டனூரில் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு கீழ் குழி தோண்டி கொண்டிருந்தார்கள். சுமார் 5 அடி ஆழத்தில் குழி தோண்டியதும், உடைந்த நிலையில் பெரிய மண் பானை போல் ஒன்று தென்பட்டது. குழி தோண்டியதில் மண் பானை உடைந்திருந்தது. உடனே குழி தோண்டும் பணியை பணியாளர்கள் பாதியிலேயே நிறுத்தினார்கள்.
முதுமக்கள் தாழி
பின்னர் அந்த மண் பானையை வெளியே எடுத்து, அதில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னர் மண் பானையை பார்த்தபோது அதில் ஏராளமான எலும்பு துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது பழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்க பயன்படுத்திய முதுமக்கள் தாழி என்பது தெரியவந்தது.
மேலும் அந்த இடத்தின் அருகே மற்றொரு குழி தோண்டியபோது அங்கேயும் முதுமக்கள் தாழி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இதுபற்றி அந்தியூர் மண்டல துணை தாசில்தார் பிரகாஷ், பட்லூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று முதுமக்கள் தாழியை பார்வையிட்டனர்.
அதிகாரிகள் பரிசோதனை
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் முதுமக்கள் தாழிகளை பரிசோதனை செய்தனர். இதற்கிடையே இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து முதுமக்கள் தாழிகளை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து முதுமக்கள் தாழிகள் அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டு தொடர்ந்து மொசக்கவுண்டனூர் பகுதியில் அகழாய்வு செய்யலாமா? என்று முடிவு செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தியூர் அருகே முதுமக்கள் தாழிகள் கிடைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.